செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: முகப்பு

தன்னுடைய திருமணத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு - வாலிபர் தற்கொலை முயற்சி!

Denied

குவைத்:  குவைத்தில் இந்திய வாலிபர் ஒருவர் தனது திருமணத்திற்கு செல்ல அவர் வேலை செய்யும் நிறுவனம் அனுமதி மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குவைத்தில் ஒரு தனியார் (kgl)நிறுவனத்தில் இந்தியர் -பஞ்சாபை சேர்ந்த ...சம்சிர் சிங் ...(பெயர் மாற்றம் செயயப்பட்டுள்ளது) என்வர் சுமார் ஐந்து வருடத்திற்கு மேலாக  மங்காப் பகுதியில் கம்பெனியின் குடியிருப்பில் தங்கி (டிரைலர்  செக்சனில்) டிரைலர்   டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு வீட்டில் பெண் பார்த்து திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டது. அதன் காரணத்தால் ஊருக்கு செல்ல கம்பெனி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்டுள்ளார் கம்பெனியும் அவருக்கு விடுமுறை கொடுத்து விட்டது

திருமணம் நடக்க உள்ள இரண்டு தினத்திற்கு முன்பு கம்பெனிக்கு சென்று பாஸ் போர்ட் கேட்க கம்பெனி நிறுவனம் திடிரனே நீ 200 தீனார் கட்டினால் தான் (இந்திய மதிப்பு 40,000 ருபாய் )உன்னை ஊருக்கு அனுப்புவேன் என கூற அதிர்ச்சி அடைந்த அந்த டிரைவர், தனக்கு இன்னும் இரண்டு தினங்களில் திருமணம் என்றும் நான் செல்ல வில்லை என்றால் அங்கு பிரச்சனை ஆகிவிடும் என்றும்  தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் மன்றாடி உள்ளார். இது என்ன புது ரூல்ஸ்  நீங்கள் தான் டிரைவர் விடுமுறைக்கு செல்லும் போது தாங்கள் தான் (விடுமுறை சம்பளமாக இரண்டு மாதம் )எனக்கு தர வேண்டும் என கூறி உள்ளார் அதை எல்லாம் பொருப்படுத்தாத கம்பெனி நிர்வாகம் நீ பணம் கட்டினால் உனக்கு பாஸ் போர்ட் இல்லை எனில் இடத்தை காலி செய் என கறாராக சொல்ல

தற்கொலைக்கு முயற்சி;

மனம் உடைந்த சம்சிர் சிங் நேராக ரூமுக்கு சென்று கத்தியை எடுத்து கழுதை அறுத்துக் கொண்டார் (15.02.2013) அருகில் இருந்த சக டிரைவர்கள் போலீஸ் சுக்கு தகவல் கொடுக்க தற்சமயம் மருத்துவமனையில் அவரது உயிர் உசலாடி வருகிறது

தந்தையும் தற்கொலைக்கு முயற்சி :

Deniedஇந்த சம்பவத்தை அறிந்து கொண்ட அவரது தந்தை திருமணமும் நின்று விட்டதால் மனமுடைந்தவர் அவரும் தூக்கில் தொங்க தற்சமயம் இவரது உயிரும் உசலாடி வருகிறது

தாயாருக்கு மாரடைப்பு ;

மகனின் திருமணமும் நின்று விட ,கணவனும் தூக்கு மாட்டி சீரியசாய இருக்க இதனால் தாயாருக்கு மாரடைப்பு வர இவரும் தற்சமயம் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் இந்த கம்பெனி நிர்வாகம் அநியாயமான முறையில் நடந்து கொண்டதால் தற்சமயம் குடும்பமே சீரழிந்து விட்டது

இவை அனைத்தையும் அறிந்த கம்பெனி டிரைவர்கள் இரண்டு தினங்களாக வேலைக்கு போகாமல் பணி நிறுத்தம் செய்து வருகின்றனர். கழுத்தை அறுத்துக் கொண்ட டிரைவருக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், டிரைவர்கள் ஊருக்கு செல்லும் போது முன் தொகை கேட்க்க கூடாது எனவும் சம்பந்தப் பட்ட அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த நெல்லை சதிஷ் துரைகுட்டி , செட்டிக்குளம் -மாய நற்பணி மன்றம் தூத்துக்குடிபாலா முன்னிலையில் கேரளத்தை சேந்தவர்கள் ,பஞ்சாபை சேர்ந்தவர்கள்  என நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட குவைத் மண்டல துணை தலைவர் வேலூர் செய்யது பாட்ஷா ,இணை செயலாளர் தஞ்சை பாதுஷா ,மீடியா செயலாளர் .. தக்க ஆலோசனைகள் கூறி ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொடுக்க அதனை வைத்துக் கொண்டு களத்தில் இறங்க போராட்டத்திற்கு ஓரளவு வெற்றி;

கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொண்ட நிபந்தனைகள்:

1,பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்

2,டிரைவர்கள்  அனைவருக்கும்110தீனார்சம்பளம் 155 தீனார் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது

3, விடுமுறை செல்லும் டிரைவர் யாராக இருந்தாலும் 200தீனார் கட்ட வேண்டிய அவசியம் இல்லை

4, விடுமுறை சம்பளம் அனைத்து டிரைவர்க்கும் வழங்கப்படும் என்று கம்பெனி நிர்வாகம் ஒப்பந்தம் கையேழுத்து போட்டது

போராட்டம் வாபஸ்  பெறப்பட்டாலும்  இன்னும் நிறைய டிரைவர்கள் தங்கள் பணிக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் டிரைவரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி மீது போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்துள்ளது.

 

 

//