செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

ஹசாரே அறிவிப்பு-கெஜ்ரிவால் அதிர்ச்சி!

ஹசாரே அறிவிப்பு-கெஜ்ரிவால் அதிர்ச்சி!ஊழலுக்கு எதிராக சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய சமூக சேவகர் அ‌ன்னா ஹசாரே மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக. ஹசாரே அறிவித்துள்ளார்.

நேற்று ஊழலுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, அன்னா ஹசாரே, தமது சக குழுவினரான அர்விந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன், கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே, மணீஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் ஆகியோரை சந்தித்து கலந்தாலோசனை செய்தார். அப்போது அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசியல் கட்சி தொடங்கும் யோசனைக்கு ஹசாரே நேரடியாகவே எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது கலைந்தது.

இதனை அடுத்து  செய்தியாளர்களிடம் பே‌சிய ஹசாரே, எங்கள் குழு பிரிந்து விட்டது என்பது துரதிருஷ்டவசமானது. நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பிலும் சேரமாட்டேன். அவர்களின் பிரசாரத்துக்கும் செல்ல மாட்டேன். தங்களின் பிரசாரத்தில் எனது படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். உங்கள் சொந்த பலத்தில் போட்டியிடுங்கள் என்றும் கூறியிருக்கிறேன். இதற்கு ஆதரவாக கிரண் பேடியும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அரசியல் கட்சித் துவங்கும் எண்ணத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேவின் அறிவிப்பு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

Comments

 
அஷ்ரப்கஜ்ஜாலி,
0 # அஷ்ரப்கஜ்ஜாலி, 2012-09-21 10:37
அப்பவே...........தெரியும் இவங்க டம்மி பீசு.............. :-) :P
புகார் தெரிவி
 

இப்பதிவில் கருத்திடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

//