செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

கருணை உள்ளம் படைத்த பிரதீபா பாட்டீல்

Mercifulமரண தண்டனை விதிக்கப்பட்ட 23 பேருக்கு அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து கருணை உள்ளம் கொண்டவராக இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திகழ்கிறார்.

 

1981 ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி குடியரசுத் தலைவருக்கு வந்த விண்ணப்பங்களில் பிரதீபா பாட்டீல்தான் ஏறத்தாழ 90 சதவிகித விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்துள்ளார். கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து 91 பேர் ஆயுள் தண்டனையாக குறைக்க விண்ணப்பித்துள்ளனர். அதில் இதுவரை 31 பேருடைய விண்ணப்பங்கள் மட்டுமே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 23 பேருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டு கருணையாளராக பிரதீபா பாட்டீல் திகழ்கிறார்.

ஐந்து பேருடைய மரண தண்டனையை அவர் ஆயுள் தண்டனையாக மாற்ற மறுத்து விட்டார். இந்த ஐந்து பேரில், ராஜீவ் காந்தியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரரரிவாளன் மற்றும் முருகன் ஆகியோரும் இதில் அடங்குவர்.அஸ்ஸாமில் ஹர்கந்தா தாஸ் என்பவரைக் கொலை செய்த தேவேந்திர பால் சிங், மகேந்திரநாத் தாஸ் ஆகிய இருவரின் மரண தண்டனைகளையும் பிரதீபா பாட்டீல் உறுதி செய்துள்ளார். இன்னும் 18 மனுக்கள் குடியரசுத்தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

தகவல் கோரும் உரிமை அடிப்படையில் சுபாஷ் அகர்வால் என்பவர் கேட்ட கேள்விக்கு குடியரசுத்தலைவர் மாளிகை இந்த விபரங்களைத் தெரிவித்துள்ளது

 

இப்பதிவில் கருத்திடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

//