இந்நேரம்.காம் | செய்தி | Tamil News

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலி!

engineeringமாநிலமெங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பி.டெக்., படிப்பிற்கான இடங்கள் காலியாக உள்ளன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சுமார்  667 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு, பி.டெக்., பொறியியல் படிப்பிற்கு, 2.34 லட்சம் மாணவர்களுக்கன இடங்கள் உள்ளன.. ஆனால், இதுவரையில் 1.37 லட்சம் மாணவர்கள் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்துள்ளனர். இவர்களில், 1.34 லட்சம் மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

மாநிலத்தில், மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகளில், 262 கல்லூரிகளில் மட்டுமே, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிலும், மாநிலத்தில் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும், 53 கல்லூரிகளில் மட்டுமே, தலா, 500 முதல் 800 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். 24 கல்லூரிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆறு கல்லூரிகளில், ஒரு மாணவர் கூட சேரவில்லை.

மாநில அரசு கல்லூரிகளில் எல்லாம், 100 சதவீத இடங்களும் நிரம்பி விட்ட நிலையில் தனியார் வசமுள்ள ஒவ்வொரு கல்லூரியிலும், அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கையில், 35 சதவீத அளவுக்கு மாணவர்கள் சேர்ந்தால் மட்டுமே, அந்த கல்லூரி, நிதிப் பிரச்னையின்றி செயல்பட முடியும். இந்நிலையில், 253 கல்லூரிகளில், இந்த ஆண்டு, 35 சதவீத அளவுக்கு கூட மாணவர்கள் சேரவில்லை. அதனால், பல கல்லூரிகள் செயல்படாத நிலையில் உள்ளன.

 

Share
//