செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதவருமான  ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க. வைச் சேர்ந்த சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகை குயிலி உள்ளிட்டோர், தங்களை அதிமுகவில் இணைத்துக்‍ கொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளரும் முதவருமான  ஜெயலலிதாவை, தலைமைக்‍ கழகத்தில் இன்று தி.மு.க.வைச் சேர்ந்த சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்‍ கொண்டார். அப்போது திருநெல்வேலி புறநகர் வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளரும், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான செந்தூர்பாண்டியன் உடன் இருந்தார்.

திரைப்பட தயாரிப்பாளரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்‍ கொண்டார். அப்போது வட சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பி. வெற்றிவேல், எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.

திரைப்பட நடிகை குயிலியும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுகவில் இணைந்தார்.

 

இப்பதிவில் கருத்திடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

//